விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த தலையாரி சாவு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சமுத்திரக்கனி(35). இவர் இக்கிராமத்தின் தலையாரியாக பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தின் கிராம
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் வாகனம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்த தலையாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சமுத்திரக்கனி(35). இவர் இக்கிராமத்தின் தலையாரியாக பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக சஞ்சீவிராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தலையாரி அடிக்கடி வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஒழுங்காக வேலைக்கு வரவேண்டும் என கண்டித்ததோடு, மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவதாக குறிப்பிட்டாராம். இதனால் தலையாரி மனம் உளைச்சளுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் ரோக்கர் விஷத்தை குடித்து விட்டு மாவட்ட அலுவலக வளாகத்தில் ஆட்சிரியர் வாகனத்தின் முன்பு உட்கார்ந்தாராம். அதையடுத்து திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து அப்பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் விரைந்து வந்தனர். உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com