பங்குனி உத்திரம் : திருச்செந்தூர் கோவில்  மார்ச் 17-ல் 4 மணிக்கு நடைதிறப்பு

முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 17-ம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய
பங்குனி உத்திரம் : திருச்செந்தூர் கோவில்  மார்ச் 17-ல் 4 மணிக்கு நடைதிறப்பு
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குதி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 17-ம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு வருகின்ற 17-ம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அதிகாலை 4.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாhத்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்பாடு நடக்கிறது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று, திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு வைத்து திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

குன்றுமேலய்யன் சாஸ்தா :

திருக்கோவிலின் உபகோவிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் புந்தல் வசதிகளும் திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா.ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் மூ.பாலு மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com