விருதுநகரில் அரசு பாலம், கட்டடங்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் அகற்றம்

மக்களவை தேர்தலு்ககான அறிவிப்பை அடுத்து விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதால், அரசு பாலம் மற்றும் கட்டடங்களில் அரசியல் கட்சியினர்  வரைந்துள்ள கட்சி சின்னங்கள் அனைத்தையும் அகற்ற
Updated on
1 min read

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை அடுத்து விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதால், அரசு பாலம் மற்றும் கட்டடங்களில் அரசியல் கட்சியினர்  வரைந்துள்ள கட்சி சின்னங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தொகுதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சிகளில், அதிமுகவினர் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் உள்ளிட்டவைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதேபோல், அரசு கட்டடங்கள் மற்றும் பாலம் உள்ளிட்ட பொது இடங்களில் கட்சி சின்னங்கள் வரையக் கூடாது. தனியார் சுவர்களில் உரிமையாளர்களின் அனுமதியோடு நிபந்தனையுடன் மட்டுமே வரைய வேண்டும்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் உள்ள சாலையோர பாலங்கள், 4 வழிச்சாலை பாலங்கள், தடுப்புச் சுவர் உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் சின்னங்களை வரைந்துள்ளனர். இதுபோன்றவைகளை உடனடியாக அழிப்பதற்கு அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் பைபாஸ் பாலம், சிவகாசி சாலை பாலம், நான்கு வழிச்சாலை பாலம் உள்பட குறிப்பிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மூலம் வெள்ளையடித்து அழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com