விருதுநகர் மக்களவை தொகுதிக்கு குழுக்கள் நியமனம்

விருதுநகர் மக்களவை தேர்தலுக்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் செலவு தணிக்கை குழு, வீடியோ பதிவு குழு, சோதனைச் சாவடி குழுக்கள் என அலுவலர்கள் நியமித்து தீவிரமாக கண்காணிப்பு
Updated on
1 min read

விருதுநகர் மக்களவை தேர்தலுக்காக ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் செலவு தணிக்கை குழு, வீடியோ பதிவு குழு, சோதனைச் சாவடி குழுக்கள் என அலுவலர்கள் நியமித்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதியில் வேட்பாளரின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கப்பட இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளவே இக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை குழுவினர், 3 சோதனைச் சாவடி ஆய்வுக்குழு, 1 வீடியோ பதிவாளர் மற்றும் 1 மதிப்பீடு செய்து குறுந்தகடில் பதிவு செய்யும் அலுவலர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உடனுக்கு உடன் மாவட்ட தேர்தல் அலுவலரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டறிந்து காவல் துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இக்குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் பிரசாரம் தொடங்கி, முடியும் வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com