ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி: போக்குவரத்து மேற்பார்வையாளர் மீது வழக்கு பதிவு

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.50 லட்சத்தை மோசடி செய்ததாக அரசுபோக்குவரத்துக் கழக மேற்பார்வையாளர் மீது இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்
Updated on
1 min read

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3.50 லட்சத்தை மோசடி செய்ததாக அரசுபோக்குவரத்துக் கழக மேற்பார்வையாளர் மீது இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(27). இவர் எம்.பி.ஏ பட்டம் பெற்று வேலையில்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்த கோவிந்தன்(53). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனக்கு தெரிந்தவர் மூலம் கோவிந்தனை வேலைவாய்ப்புக்காக அணுகியுள்ளார். அப்போது ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினாராம். இதை உண்மையென நம்பிய மகேஸ்குமார் ரூ.3.50 லட்சத்தை கடந்த 2009ல் கொடுத்தாராம்.

அதையடுத்து, குறிப்பிட்ட நாள்களுக்குள் வேலை வாங்கிக் தராமல் நாள்களை நகர்த்தி வந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து கொண்டு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதையடுத்து கடந்த 5.4.2012ல் ரூ.90 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு மீதப்பணம் ரூ.2.60 லட்சம் பணத்தை கொடுக்க முடியாது என மிரட்டினாராம். இது குறித்து உடனே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கோவிந்தன் மீது புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்தியதில் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழக மேற்பார்வையாளர் கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com