விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.81 ஆயிரம் முறைகேடு: அலுவலர்கள் மீது புகார்

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கச்சேரி சாலையில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் மேலாளராக ரமேஷ், காசாளராக ரத்தினக்குமாரும் பணியாற்றிவருகிறார்கள்.இவர்கள் பணியாற்றி வரும்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.81 ஆயிரம் முறைகேடு செய்ததாக மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கச்சேரி சாலையில் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியில் மேலாளராக ரமேஷ், காசாளராக ரத்தினக்குமாரும் பணியாற்றிவருகிறார்கள்.இவர்கள் பணியாற்றி வரும் பிரிவில் கடந்த 2012-ல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வங்கி கணக்குகளை தீவிரமாக அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ரூ.81 ஆயிரம் முறைகேட்டில் ஈடுபட்டு, தங்களின் கணக்கிற்கு மாற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது தொடர்பாக மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் மல்லீஸ்வரி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com