நெல்லை: விடுதியில் பட்டதாரி இளைஞர் வெட்டிக் கொலை
தனியார் நிதிநிறுவன கடன் பிரிவு மேற்பார்வையாளராக பணி செய்து வந்த பட்டதாரி இளைஞர் திருநெல்வேலி விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


தனியார் நிதிநிறுவன கடன் பிரிவு மேற்பார்வையாளராக பணி செய்து வந்த பட்டதாரி இளைஞர் திருநெல்வேலி விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து மகன் ஆறுமுகம் (28). பட்டதாரியான இவர் எச்டிஎப்சி வங்கியில் கடன் பிரிவு மேற்பார்வையாளராக பணி செய்து வந்தார். இதே நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டியராஜன் (22), திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுப்புக்குட்டி (20) ஆகியோர் கடன் வசூல் செய்யும் பணி செய்து வருகின்றனர்.
தினமும் கடன் வசூல் தொடர்பான தகவல்களை ஆறுமுகத்திடம், பாண்டியராஜன், சுப்புக்குட்டி ஆகியோர் தெரிவிக்க வேண்டும். எனினும் சுப்புக்குட்டியின் பணி திருப்தி இல்லாததால் அவரை மேற்பார்வையாளர் ஆறுமுகம் கண்டித்தாராம். இது குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் சுப்புக்குட்டி குறித்து ஆறுமுகம் புகார் தெரிவித்தாராம். இதை தொடர்ந்து சுப்புக்குட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மதுரை பிரதான சாலையில் தனியார் விடுதியில் இயங்கி வந்த அந்நிறுவன அறையில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீஸார் சென்று ஆறுமுகம் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆறுமுகத்தை, சுப்புக்குட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...