ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தளப்பாதை அமைக்க நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்

ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் அடிப்படை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்காளிக்கும் வகையில் சாய்வு தளப்பாதையை குறிப்பிட்ட நாள்களுக்குள் அமைக்க வேண்டும் என
Updated on
1 min read

ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் அடிப்படை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்காளிக்கும் வகையில் சாய்வு தளப்பாதையை குறிப்பிட்ட நாள்களுக்குள் அமைக்க வேண்டும் என அலுவலர்களை  தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் வாக்குச் சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில் சாய்வுதளம் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக   அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில்,

மக்களவை தேர்தல்-2014 அறிவிக்கப்பட்டதை அடுத்து அலுவலர்கள் குழு அமைத்து கண்காணிப்பது மற்றும் வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும்  மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் எளிதாக வந்து வாக்களிக்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதா என்பது நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 7 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் இந்த வசதி இல்லாமல் இருக்கிறது.

அவ்வகையில், ராஜபாளையம்-25, ஸ்ரீவில்லிபுத்தூர்-12, சாத்தூர்-15, சிவகாசி-38, விருதுநகர்-15, அருப்புக்கோட்டை-36, திருச்சுழி-4 என மொத்தம் 147 வாக்குச் சாவடி மையங்களில் சாய்வு தள வசதிகள் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இம்மைங்களில் குறிப்பிட்ட நாள்களுக்குள் சாய்வுதள பாதை வசதியை ஏற்படுத்துவதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு வாக்குப் பதிவு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் வாக்காளர்கள் ஆகியோருக்கான குடிநீர், சுகாதார வளாகம் மின்சாரம் ஆகிய வசதி உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, அதற்கேற்ப உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என அலுவலர்களை ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் அந்தந்த பகுதிகளின் வட்டாட்சியர்கள், ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com