விருதுநகர் அருகே வாகன விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி சாவு

மும்பையை அடுத்த ஔரங்கபாத்தை சேர்ந்தவர் ஆனந்த் கங்குவார்(46). இவர் தனியார் டயர் உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறராம். இந்நிலையில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே பாலச்சுவரின் ஓரத்தில் மோதி தனியார் டயர் கம்பெனியின் விற்பனை அதிகாரி சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மும்பையை அடுத்த ஔரங்கபாத்தை சேர்ந்தவர் ஆனந்த் கங்குவார்(46). இவர் தனியார் டயர் உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறராம். இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து அலுவலக பணி காரணமாக மதுரைக்கு சனிக்கிழமை பிற்பகலில் தனது காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புதுப்பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய பாலத்தில் இரும்பு தடுப்பின் மீது எதிர்பாரதமாக மோதியதில் தூக்கி வீசிப்பட்டதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விருதுநகர் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விருதுநகர் சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com