மதுரையில் மாரத்தான் போட்டி நடத்துவதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரை கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மாரத்தான் போட்டி நடத்துவதாகக் கூறி தனியார் அமைப்பு ஒன்று, பல பேரிடம் கட்டணம் வசூலித்தது. பின்னர் காலையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சிறிது தொலைவு ஓடி, ஆட்டோவில் ஏறி வந்து முதலில் வந்தவர்களுக்கு பரிசு கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரை கல்லூரியில் உள்ளே அமர்ந்து முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் வசூலித்த கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் என்று கோரினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.