கேபிள் டிவியில் விளம்பரம் செய்வதற்கு விளம்பர தணிக்கை, கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர்

கேபிள் டிவி மற்றும் இணைய தளம் மின்னணு சாதனங்கள் வழியாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் ஆகியோர் விளம்பரம் செய்வதற்கு விளம்பர தணிக்கை மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதியை
கேபிள் டிவியில் விளம்பரம் செய்வதற்கு விளம்பர தணிக்கை, கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர்
Updated on
1 min read

கேபிள் டிவி மற்றும் இணைய தளம் மின்னணு சாதனங்கள் வழியாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் ஆகியோர் விளம்பரம் செய்வதற்கு விளம்பர தணிக்கை மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதியை பெற்றுதான் ஒளிபரப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன் கேபிள் டிவி ஆபரேட்டர்களை கேட்டுக் கொண்டார்.

விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் அனைத்து டி.வி.கேபிள் ஆபரேட்டர்கள், உள்ளூர் டி.வி ஓளிப்பரப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்களுக்கான தேர்தல் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து அறிவுரை வழங்கி பேசியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும் மின்னணு சாதனங்கள் வழியாக தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

அதற்கு முன்பாக தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டு சான்றளிக்கப்பட்ட பின்னரே ஓலிபரப்ப வேண்டும். இதற்காக மின்னணு சாதனங்கள், வலைதளங்கள் வழியாக விளம்பரம் மேற்கொள்ளும் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சான்றளிப்பதற்காக மாவட்ட அளவிலான விளம்பர தணிக்கை மற்றும் கண்காணிப்பு குழு அமைத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

விளம்பரங்களை தணிக்கை செய்த பின் பதிவு செய்த குறுந்தகடில் அழியாத மையினால் சான்றொப்பம் செய்து அரசியல் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும். அதையடுத்து குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டுள்ளவைகளை மட்டுமே கேபிள் டிவியில் ஒலிபரப்ப வேண்டும். இதுபோன்றவைகளை கடைபிடிக்காதவர்களை  தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகவும் கருதப்படும். அங்கிகாரம் பெற்ற கட்சியின் வேட்பாளர்களுக்கு மூன்று நாள்களுக்குள்ளும், அங்கிகாரம் பெறாத கட்சிகளின் வேட்பாளர்களுக்கு 7 நாள்களுக்குள்ளும் சான்று அளிக்கப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பவானிஜீஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ப.முத்துக்கிருஷ்ணன், நேர்முக உதவியாளர்(கண்ககு) பாண்டியராஜன், பயிற்சி துணை ஆட்சியர்கள் ராஜசேகரன், செந்திக்குமாரி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com