விருதுநகரில் அரசியல் கட்சியினருக்கு கூட்டங்கள் நடத்துவதற்கு தேர்தல் விதிமுறைகளை காரணம் கூறி வாடகைக்கு கொடுப்பதில் உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு திருமண அரங்குகளை கொடுப்பதில் பல்வேறு தேர்தல் விதிமுறைகளை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டியது உள்ளது. இதுபோன்ற காரணங்களை கூறி அரசியல் கட்சியினருக்கு வாடகைக்கு விடுவதற்கு உரிமையாளர்கள் தயங்குகின்றனர். அரசியல் கட்சியினருக்கு வாடகைக்கு கேட்டால் பல்வேறு நிபந்தனைகளை கூறுகின்றனர். அப்பகுதி காவல் நிலையத்திலும், தேர்தல் அலுவலரிடமும் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதேபோல் அரங்குகளின் உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டியுள்ளது.
இதுபோன்ற காரணங்களை கூறி அரசியல் கட்சியினரிடம் அதிகமான வாடகையும் எதிர்பார்க்கின்றனர். கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டு சேதாரங்கள் ஏற்பட்டால் அதற்கான தொகைகளையும் வாடகையுடன் சேர்த்து முன்பணமாக செலுத்த வேண்டி உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். பெரிய அளவிலான அரங்கங்களையே முன்னணி அரசியல் கட்சியினர் வாடகைக்கு பிடிக்கின்றனர். சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் அதிக வாடகை கொடுத்து பிடிக்க முடியாத நிலையிருக்கிறது. அதிலும், ஒரு சில கட்சிகள் கூட்டம் நடத்தி முடித்து விட்டு வாடகை உடனே தராமல் பின்னர் தருவதாக கூறி நிர்வாகிகள் காலதாமதம் செய்வதாக அரங்கத்தின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பா.ஜ.க கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், திருமண அரங்குகளில் கூட்டம் நடத்துவதற்கு பல்வேறு விதிமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது. அதற்கு முன்னதாக அரங்குகள் வாடகைக்கு பிடித்து, அப்பகுதி காவல் நிலையம் மற்றும் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் ஆகியோரிடம் விண்ணப்பித்து கூட்டம் நடத்துவதற்கு தடையில்லா சான்று பெற வேண்டியுள்ளது.
அதே நடைமுறையை அரங்கம் நடத்துகிறவர்களும் செய்ய வேண்டும். இதுபோன்ற வீன் அலைச்சலை தவிர்ப்பதற்காக அரசியல் கட்சியினருக்கு வாடகைக்கு கொடுப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அதேநேரத்தில் பெரிய அளவிலான அரங்குகள் கிடைக்காமல் சிறிய அரங்குகளில் நடத்தி வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகமாகி அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ அச்சத்திலேயே அரசியல் கட்சியினர் கூட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

