விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி முதல்வர் ஜெயலலிதா பட்டியல்

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனை ஆதாரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக்
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி முதல்வர் ஜெயலலிதா பட்டியல்
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டார்.

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனை ஆதாரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பங்கேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: இம்மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் ரமண மகரிஷி ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.24.10 லட்சத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 3 இடங்களில் பாலம் அமைப்பதற்காக ரூ.5.60 கோடியும், ராஜபாளையம் நகராட்சியில் உள்ள சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படுத்தவும், ராஜபாளையம் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் சித்த பிரிவு தொடங்கப்பட்டும் அதற்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிவகாசியில் பட்டாசு விபத்தில் காயம் அடையும் தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.4.50 கோடியில் நவீன சிகிச்சை மையமும்,  தொழிலாளர்கள் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ரூ.2.36 கோடியில் பயிற்சி மையமும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பொருள்களை பதப்படுத்தும் வகையில் 3400 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா, அருப்புக்கோட்டையில் அரசு தொழில் பயிற்சி நிலையம், சாத்தூர் நகராட்சியில் ரூ. 37.66 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம், விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருப்பரங்குன்றத்தை புரதான நகராக அறிவித்து ரூ.1 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தேமுதிகவின் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கே.எம்.சுப்பையா, நகர பொருளாளர் மகேஸ்வரன், மாணவரணிச் செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் பூஞ்சோலை, நகர செயலாளர் ஏங்கல்ஸ் உள்ளிட்ட 1500 பேரும், திமுகவைச் சேர்ந்த 500 பேரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர்கள் கார்டுகளையும் வழங்கினார்.

தகவல் துளிகள்: தமிழக முதல்வர் தேர்தல் பிரசார கூட்டம் என்பதால் காலை 8.30 மணியிலிருந்து விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் வரத் தொடங்கினர். முதல்வர் பேச இருந்த மேடைக்கு எதிரே சுற்றிலும் மக்களவை அரங்கம் கட் அவுட்களாக வைக்கப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் மேடைக்கு முன்பு உள்ள வெட்டவெளி மைதானத்தில் சேர்கள் போடப்பட்டிருந்தன.

அதில் கடும் வெயிலையும்  பொருட்பாடுத்தாமல் நீண்ட நேரமாக அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு காற்றுக்காக விசிறியும், தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் பாக்கெட்கள் மற்றும் புளியோதரை சாதம் உள்ளிட்டவைகள் தாரளமாக கட்சியினரால் வழங்கப்பட்டன. முதல்வர் மேடைக்கு வருவதற்கு முன்பே அமைச்சர்கள் நின்றனர். அவர் பேசத் தொடங்கியதும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அமர்ந்தனர். சரியாக 2.05 மணிக்கு 2.45 வரையில் பேசினார்.

வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் தொடக்கத்திலிருந்தே நின்று கும்பிட்டபடியே முதல்வர் பேசி முடிக்கும் வரையில் நின்று கொண்டே இருந்தார். முதல்வரை வரும் வழியில் வரவேற்பதற்காக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொகுதியிலிருந்து பூரண கும்ப மரியாதை மற்றும் முளைப்பாரி ஊர்வலத்திற்கு ஒரு சீருடையில் மகளிர் குழுவினர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com