விருதுநகரில் பிரசாரம் செய்து விட்டு வந்த போது ரயில்வே கேட் மூடப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் வேட்பாளர் ஆகியோர் சிக்கித் தவித்தனர்.
விருதுநகரில் அதிமுக வேட்பாளர் டி.இராதாகிருஷ்ணனை ஆதாரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் ஆகியோர் கருப்பசாமி நகர், பேராலி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு திரும்பி வந்தனர். அப்போது, ராமமூர்த்தி ரயில்வே கடந்த போது செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் வரும் நேரத்திற்காக கேட்டு அடைக்கப்பதற்காக இறக்கப்பட்டிருக்கும் போது பிரசார ஜீப்புடன் வந்தனர். அப்போது, 15 நிமிடம் வரையில் காத்திருக்க முடியாது என கருதியதால் வேகமாக ஜீப் ஓட்டிச் சென்ற போது நடுவில் மாட்டிக்கொண்டனர். பின்னர் பணியாளரை அழைத்து அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து 10 விநாடிகளுக்கு பின் கேட்டிற்குள் சிக்கியிருப்பது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் என்பது தெரிந்தது. ரயில் வருவதற்கு முன்பாகவே ரயில்வே கேட்டை திறந்த விட்டதை அடுத்து வெளியேறி வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.