லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி பெண் அதிகாரி கைது

மதுரை செல்லூர் நாடார்சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் கயல்விழி. பட்டதாரிப் பெண்ணான இவருக்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 4 கிராம் தங்கம் 50 ஆயிரம்
Updated on
1 min read

மதுரை செல்லூர் நாடார்சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் கயல்விழி. பட்டதாரிப் பெண்ணான இவருக்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 4 கிராம் தங்கம் 50 ஆயிரம் ரொக்கம் வாங்க ஜீவானந்தம் விண்ணப்பித்துள்ளார். அப்படி விண்ணப்பித்தபோது சமூக அமைப்பாளர் மனோன்மணி என்பவர், அதனை அனுப்ப ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வகையில், இவருக்கான விண்ணப்பம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்ததால், அவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு தடுப்பு அதிகாரி டிஜிபி இசக்கியானந்தத்திடம் புகார் செய்துள்ளார்.

அவர், ஆய்வாளர் சூரியகலா உதவியுடன் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்ப, லஞ்சம் பெற்ற மனோன்மணி இன்று மதியம் அலுவலகத்தில் வைத்து பிடிபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com