ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி  43-வது முறையாக தேர்தலில் தேர்தலில் போட்டியிடும் மில் காவலாளி

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி 43-வது முறையாக ஸ்பின்னங் மில் தொழிலாளி ஒருவர் மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்து பரபரப்பை
Updated on
1 min read

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி 43-வது முறையாக ஸ்பின்னங் மில் தொழிலாளி ஒருவர் மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வந்தாலே அரசியல் கட்சியினருக்கு ஆர்வம் என்பது கிடையாது. சாதாரண நபர்களுக்கும் மகிழ்ச்சி என்பதை மில் காவலாளி நிரூபித்துள்ளார். ராஜபாளையம் அருகே நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்மதன்(60). இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். அதோடு, ரஜினி ரசிகர் மன்றத்தின் ராஜபாளையம் ஒன்றியத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருடைய இரண்டு மகனும் கல்வியியல் கல்லூரியில் பயிற்சி முடித்து ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் அறிவித்ததை அடுத்து சனிக்கிழமை தனது வேட்பு மனுவை ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். அப்போது, இவர் சொத்து மதிப்பாக ரூ.4.50 லட்சத்தில் காரை வீடு, ரூ.1.25 லட்சத்தில் காலனி குடியிருப்பு மற்றும் 4 கிராம் மோதிரம் ஆகியவைகளை காட்டியுள்ளார்.

இதுவரையில் உள்ளாட்சி முதல் மக்களவை தேர்தல் வரையில் பல பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளாராம். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தேன். அவரது மறைவிற்கு பின் அவரைப் போலவே நல்ல மனசு உள்ள ரஜினிகாந்தின் தீவிர ரசிகரானேன். அதையடுத்து 96-ல் அரசியலுக்கு ஆதரவு கொடுத்தார். அதையடுத்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறேன்.

இந்நிலையில் முதன், முதலாக 1989 முதல் உள்ளாட்சி தேர்தலில் எனது கிராமத்தின் வார்டு உறுப்பினராக போட்டிபோட்டு வெற்றி பெற்றேன். அதிலிருந்து ஒவ்வொரு உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் உள்ளிட்டவைகளில் போட்டியிட்டு வருகிறேன். இதுவரையில் தமிழக முதல்வருடன் பர்கூர், டி.ராஜேந்தரின் மனைவி உஷாவுடன் பழனி தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூரில்  தாமரைக்கனி, மக்களவை தேர்தலில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, நீதியரசர் ராமசாமி ஆகியோரை எதிர்த்தும் போட்டியிட்டுள்ளேன். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் என்பது அழியாத கல்வெட்டு, அதில் என்னுடைய பெயர் இடம் பெற வேண்டும். எப்படியாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு அளிக்க வேண்டும் என்பதே இலக்கு எனவும் மன்மதன் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com