

மதுரையில் இன்று காலை நடிகர் எஸ்.வி. சேகர் அழகிரியை நேரில் சந்தித்து பேசினார். திமுக வில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அழகிரியை சந்தித்து பேசி வருகின்றனர். இதையடுத்து இன்று காலை எஸ்.வி. சேகரும் அழகிரியை சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
சிவகாசியில் நாடகம் நடத்துவதற்காக செல்லும் வழியில் அழகிரியை சந்திக்க வந்தேன் அவர் அரசியலை தாண்டி எனக்கு நல்ல நண்பர் அவரிடம் அரசியல் பேச அவசியம் இல்லை. தற்போது திமுக. வில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். என்னை பா.ஜ.கவில் முழுமையாக ஏற்கவில்லை இந்நிலையில் இருவரும் சந்தித்து பொதுவான விசயங்களை பேசினோம்.
புதுதில்லியில் உள்ள அரசியல் நிலையைப் போல அரசியல் வேறு நட்பு வேறு எனற அடிப்படையிலேயே நான் இருந்து வருகிறேன். அதன்படி எனது நாடகத்திற்கு இதுவரை முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணநிதி, பொன்.ராதகிருஷ்ணன், அழகிரி, ஸ்டாலின் என அனைவருமே வந்துள்ளனர்.
இதுபோன்ற செயல்பாடே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். ஆகவே மோதி விளையாடு பாப்பா. என்ற நாடகத்தை பார்க்க அவரை அழைத்தேன். எனது மகனின் திரைப்படம் குறித்தும் பேசினேன். வரும் ஏப் 14 ம் தேதிக்கு பிறகு அழகிரிக்கு எல்லாம் சரியாகிவிடும் இதை நான் ஒரு நண்பர் முறை என்ற முறையிலும் ஜோதிட பார்ப்பவன் என்ற முறையிலும் கூறுகிறேன்.
ஜோதிட கட்டத்தில் கிரகங்கள் நன்றாக இருக்கும் போது யாரும் அவரை கட்டம் கட்ட முடியாது கட்டம் கட்டினாலும் அவை விலகிவிடும். அவர் ஜோதிடத்தை நம்பாமால் இருக்கால்ம ஆனால் சிறந்த நண்பர். அழகிரிக்கு நான் ஆறுதல் கூற தேவையில்லை.
அவர் தற்போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். திமுகாவில் தென்மாவட்ட பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கலாம் கருணாநிதியின் மகன் என்பதில் இருந்து என்றைக்கும் நீக்க்க முடியாது. ஸ்டாலின் கனிமொழி ஆகியோரின் அண்ணன் என்பதில் இருந்து அவரை நீக்க முடியாது. என்றாவது ஒருநாள் அவர்கள் இணைவார்கள் அவர்கள் குடும்பத்தில் சமரசம் ஏற்படுத்த நான் முயற்சிக்க தேவையில்லை அதுவே நன்றாகவே நடக்கும். பா.ஜ.க 300 இடங்களுகு மேல் வெற்றி பெற்று மோடி பிரதமராவார் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.