விருதுநகர் மக்களவை தொகுதி பொதுமக்கள் யார் நமக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என மதிமுகவின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் தேர்தல் அலுவலகம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அவைத்தலைவர் துரைசாமி தேர்தல் அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொடுமைகளை செய்த காங்கிரஸ் அரசை பொதுமக்கள் தூக்கியெறிய வேண்டும். விருதுநகர் மக்களவை தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. எனவே பொதுமக்கள் யாரெல்லாம் உங்களுக்கு நல்லது செய்தார்கள் என்பதை சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.
மொராய்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்ட பல்வேறு பிரதமர்களை நேருக்கு நேராய் சந்தித்து தமிழர்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தவர்தான் வைகோ என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழர்களுக்கு எங்கெல்லாம் பிரச்னைகள் எழுகிறதோ அங்கெல்லாம் நேரில் சென்று போராடியுள்ளார்.
அவர் எம்.பியாக இருந்த போது 65 ஆயிரம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமலை தடு்பபூசியும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிகி்ச்சையும் அளித்துள்ளார். அதேபோல், ஈரோடு மாநகராட்சியில் 5 லட்சம் மக்கள் குடிநீர் ஆதரத்திற்கு வழிவகுக்கும் திட்டம் கிடப்பில் இருந்தது. அதை சரிசெய்ய வேண்டும் என ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் புதுதில்லிக்குச் சென்று அத்துறையின் அமைச்சரை நேரில் சந்தித்து ரூ.390 கோடி ரூபாய்க்கான திட்டத்தை உடனே பெற்றுத் தந்தார். இதேபோல், தன்னலம் கருதாமல் பாடுபடும் தலைவருக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.