சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, ரயில்வே நிலையத்தின் வெளிப்புற நடவடிக்கைகளை வெப்கேமரா பொறுத்தி கண்காணிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு பெட்டியில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், புதிய பேருந்து நிலையங்கள், பராசக்தி மாரியம்மன் கோயில், பொதுமக்கள் கூடும் வழிபாட்டு தலங்களான சிவன் ஆலயம், திருத்தங்கல் முருகன் ஆலயம், ராமர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் வெடிகுண்டு நிபுணருடன், ஆயுதப்படை மற்றும் போலீஸார்கள் 20 பேர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல், ரயில் நிலையங்களில் ரயில் பாதுகாப்பு படை போலீஸார்-8, ரயில்வே காவல் நிலைய போலீஸார்-10 பேர் மற்றும் ஆயுதப்படை போலீஸார் 5 பேர் என கோவை பயணிகள் ரயில், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸிபிரஸ் உள்ளிட்ட ரயில்களில் ஒவ்வொரு பெட்டி, பெட்டியாக ஏறி சோதனை மேற்கொண்டனர். மேலும், ரயில் நிலையத்திற்கு வருகின்றவர்களையும், முன்புறம் ஆட்டோ நிறுத்தம், கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வருகிறவர்கள் உள்ளிட்டவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் நிலைய முகப்பிலிருந்து முக்கிய இடங்களில் வெப்கேமரா பொறுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

