மதுரையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவக்கம்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று காலை 6 மணிக்கே
Updated on
1 min read

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று காலை 6 மணிக்கே விண்ணப்பங்கள் வழங்குவதற்கான பணிகள் துவங்கிவிட்டன.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இன்று விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் துவங்கின.

பொறியியல் விண்ணப்பம் வாங்க, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு திரண்டுள்ளனர். மதுரைக்கு மட்டும் சுமார் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com