விருதுநகர் மாவட்டத்தில் பி.இ கலந்தாய்வுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 1645 விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் பி.இ கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 60 மையங்களில் சனிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 20-ம் தேதி வரையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. இதில், இம்மாவட்டத்தில் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இரு மையங்களில் வழங்கப்படுகிறது.
இதில், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலையில் 9.30 மணிக்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். காலை முதல் 1 மணி வரையில் 500 விண்ணப்பங்களும், அதற்கு பின் 300 விண்ணப்பங்களும் என மொத்தம் 800 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதேபோல், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரியில் 845 விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
கடந்தாண்டில் முதல் நாளில் விருதுநகர்-980, ராஜபாளையம்-950 என விண்ணப்பங்களும் விற்பனையானது. ஆனால், நிகழாண்டில் முதல் நாளில் குறைந்த அளவிலேயே விநியோகம் நடைபெற்றுள்ளதாக பணியாளர்கள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

