அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஒண்டிப்புலி கல்குவாரியில் நீர்மட்டம் உயர்ந்தது

விருதுநகர் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஒண்டிப்புலி கல்குவாரி நீர் தேக்கத்தில் மழை பெய்ததை அடுத்து நீர்மட்டம் 45 அடியாக ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :4 மே 2014, 11:32 am

விருதுநகர் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஒண்டிப்புலி கல்குவாரி நீர் தேக்கத்தில் மழை பெய்ததை அடுத்து நீர்மட்டம் 45 அடியாக ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் அணை, காரிசேரி கல்குவாரி, ஒண்டிப்புலி கல்குவாரி, சுக்கிரிவார்பட்டி கல்குவாரி ஆகியவைகள் விருதுநகர் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் ஆகும். இந்நிலையில் போதிய மழையில்லாத நிலையில் ஆனைக்குட்டம் அணையில் நீர் இருப்பு குறைந்தது. அதேபோல், ஆற்றோடையில் உறைகிணறுகளில் இருந்து நகராட்சி பகுதிக்கு தேவையான தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதேபோல், கல்குவாரி நீர் தேக்கங்களிலும் நீர் இருப்பு அளவு குறைந்திருந்தது. இந்நிலையி்ல குறைந்த அளவு நீரைக் கொண்டும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நீரையும் வைத்து வாரத்திற்கு ஒரு முறை விநியோகம் செய்து குடிநீர் பிரச்னை தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு வரையில் 10 நாள்களுக்குத்தான குடிநீரை எடுக்க முடியும் என்கிற சூழ்நிலை இருந்தது. இதையடுத்து, குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன செய்வது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன், நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். அப்போது, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 நாள்களாக இப்பகுதியில் சாரல் மற்றும் பரவலாகவும் மழை பெய்து வருவதால் ஓடைகளில் நீர்வரத்து, காடுகளில் தேங்கிய உபரி நீர் ஆகியவைகளின் நீர் வரத்தால் ஒண்டிப்புலி கல்குவாரியில் ஏற்கனவே 20 அடியாக இருந்த நிலையில் 45 அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல், காரிசேரி, சுக்கிரிவார்பட்டி ஆகிய கல்குவாரிகளில் சிறிதளவு உயர்ந்துள்ளது. அதனால், விருதுநகர் பகுதிக்கு பிரச்னையில்லாமல் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யலாம் என்பதால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.