விருதுநகர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் காளீஸ்வரன்(14). மேற்கு பகுதியில் திங்கள்கிழமை வழக்கம் போல் ஆடுமேய்ப்பதற்காக சென்றுள்ளனர். அதையடுத்து மாலையில் 6 மணிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது இடிமின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, காளீஸ்வரன் மீது இடி மின்னல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக உடன் வந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.