மதுரை மாணவர் சிவராம் மாநில அளவில் பிரெஞ்சு பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த சிவராம் பத்தாம் வகுப்பிலும் சாதனை படைத்தவர்.
இயற்பியல், வேதியல், கணிதம் பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களும் பிரெஞ்ச் பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் பிரெஞ்ச் பாடத்தில் முதலிடமும் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1192.
மதுரை மாவட்ட அளவிலும் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.
கடின உழைப்புடன் திட்டமிட்டு படித்ததால் இந்த இலக்கை அடைந்ததாக சிவராம் கூறியுள்ளார். மேற்கொண்டு மருத்துவம் படித்து மருத்துவராக ஆசைப்படுவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.