விருதுநகர் மாவட்டத்தில் புவியியல், ஆடை வடிவமைப்பு ஆகிய பாடங்களில் மாநில அளவில் 2-வது இடம் பெற்ற மாணவிகள்

விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  பிளஸ்டூ தேர்வில் புவியியல் மற்றும் ஆடை தயாரித்தலும், வடிவமைப்பும் ஆகிய பாடங்களில் மாநில அளவில் 2-வது இடம் பெற்று சாதனை செய்துள்ளனர்.
Updated on
2 min read

விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  பிளஸ்டூ தேர்வில் புவியியல் மற்றும் ஆடை தயாரித்தலும், வடிவமைப்பும் ஆகிய பாடங்களில் மாநில அளவில் 2-வது இடம் பெற்று சாதனை செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதை மாணவ, மாணவிகள் படித்த பள்ளிகளுக்கு சென்று தகவல் பலகையில் வெளியிடப்பட்டிருந்த பிளஸ்டூ தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

விருதுநகரை சேர்ந்த சுப்பிரமணியன்-ஞானசௌந்தரி தம்பதியின் மகள் சுகனயா(17). ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ தொழிற் பிரிவு பயின்றார். இவரது தந்தை லேத் பட்டறைத் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆடை தயாரித்தலும், வடிவமைத்தலும் பாடத்தில் 200-க்கு 185 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக மாணவி கூறுகையில், நான் தொலைக்காட்சி பார்க்கமாட்டேன். டியூசனும் சென்றது இல்லை. இரவு நேரத்தில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததை அன்றைய நாளிலேயே அமைதியாக படித்து முடிப்பேன். ஆடை தயாரித்தல் பாடத்தில் ஆசிரியர் நன்றாக கற்றுக் கொடுத்ததால் தான் என்னால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று தமிழாசிரியராக ஆக வேண்டும் என்பதே லட்சியம் என்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-156, ஆங்கிலம்-104, ஆடை தயாரித்தலும், வடிவமைத்தலும்-185, மனை அறிவியல்-138, செய்முறை1-200, செய்முறை2-200 என மொத்தம் 1200க்கு 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

புவியியல் பாடத்தில் 2-வது இடம்:

விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்-வைரமணி தம்பதியரின் மகள் ராஜகாளீஸ்வரி(17). இவர் இதே பள்ளியில் கலை பிரிவில் படித்தார். இவரது தந்தை தச்சு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிளஸ்டூ தேர்வில் புவியியல் பாடத்தில் 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றார்.

இது குறித்து அம்மாணவி கூறுகையில், பள்ளிக்கூடத்திற்கு போய் விட்டு வந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். எந்த மாதிரி படித்தால் புவியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்பது குறித்து ஆசிரியர் கற்பிப்பார். அதன் அடிப்படையிலேயே படித்தேன். ஆனால், மாநில அளவில் சிறப்பிடம் பெறுவேன் என்பது குறித்து தெரியாது. கல்லூரியில் ஆங்கிலம் பாடத்தை எடுத்து படித்து, எதிர்காலத்தில் ஆசிரியராக வர வேண்டும் என்பதுதான் எனது தந்தையின் ஆசை. அதே நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டு படிப்பேன் என்றார்.

பாடவாரியாக மாணவி பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-175, ஆங்கிலம்-130, புவியியல்-199, வரலாறு-182, பொருளாதாரம்-188, சிறப்புத் தமிழ்-165 என மொத்தம் 1200க்கு 1022 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளியின் செயலாளர் பி.டி.ஆர்.தனிக்கொடி, தலைமையாசிரியர் ராஜசௌந்தரி, ஆசிரியைகள் ஆகியோர் மற்றும் நிர்வாக்குழுவினர் ஆகியோர் மாணவிகளை பாராட்டி கேடயம் உள்ளிட்டவைகளை பரிசாக வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com