மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

திருநெல்வேலி அருகே சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவியின் கணவர் கொலை

மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த நடராஜன் மகன் பொன்னுச்சாமி (45). அரசு பஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.  இவரது மனைவி ஜெயராணி. இவர், சேதுராயன்புதூர் ஊராட்சித்

Updated On :9 மே 2014, 1:37 pm

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவியின் கணவர் வெள்ளிக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரைச் சேர்ந்த நடராஜன் மகன் பொன்னுச்சாமி (45). அரசு பஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.  இவரது மனைவி ஜெயராணி. இவர், சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவியாக உள்ளார். இத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொன்னுச்சாமி்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் கடந்த 2013-ம் ஆண்டில் ராமச்சந்திரன் கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக பொன்னுச்சாமி, ஜெயராணி உள்ளிடோட்டோர் மீது மானூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ் வழக்கில் பொன்னுச்சாமி கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து அரசுப் பணியில் இருந்து தாற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள நூலகத்தில் அமர்ந்திருந்த பொன்னுச்சாமியை, மர்மகும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாம். பலத்த காயமடைந்த பொன்னுச்சாமியை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பொன்னுச்சாமி இறந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சேதுராயன்புதூரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.