விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவர் பதவிக்கும் வருகிற 18-ம் தேதி அந்தந்த உள்ளாட்சி அலுவலகத்தில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கு, குறிப்பிட்ட நாளில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கோட்டநத்தம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கொங்கன்குளம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் மறைக்குளம் ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் குறிப்பிட்ட நாளில் காலை 9.30 மணிக்கு நடைபெற இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.