

தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை நிற பட்டாடை உடுத்திய கள்ளழகர், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. வைபத்தைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. இருந்த போதும், லட்சக் கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இரவு நேரத்திலேயே குவிந்து அழகரை தரிசிக்கக் காத்திருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்ட மாலையை அணிந்து புறப்பட்ட கள்ளழகர் பக்தர்கள் படை சூழ காலை 6.10 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷமிட்டனர்.
அப்போது கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் அழகர் மீது துருத்தி நீர் தெளித்து மகிழ்ந்தனர். சுமார் 10 லட்சம் பக்தர்கள் வைகை ஆற்றிலும், அதன் கரையிலும் மேம்பாலங்களிலும் நின்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தரிசித்தனர். இந்த விழாவை முன்னிட்டு மதுரை நகரம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
விழவை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.