விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அக்னி நட்சத்திர தாக்கம்: பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வியாழக்கிழமை பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

News image
Updated On :15 மே 2014, 1:40 pm

ஷேக் அப்துல்காதர்

அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வியாழக்கிழமை பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கோடை வெப்பம் திருநெல்வேலி மாவட்டத்தில் 103 டிகிரி நீடித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய சில தினங்களில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்துள்ளது. கோடை வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நீர் நிலைகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு வந்திருந்தனர். அருவியில் தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளித்தனர்.

சிறுவர்களும் பெண்களும் அருவியின் மற்றொரு பகுதியில் குளித்து மகிழ்ந்தனர்.

பாலத்தை அடுத்துள்ள சிறிய அருவியில் சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர். அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு பூங்காவுக்கு சென்று

திரும்பினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள், மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மணிமுத்தாறு, பாபநாசம் அருவிக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பாபநாசம் தலையணையிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகள் மற்றும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்வதால், இவை

சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகளி்ன் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.