

திமுகவின் படுதோல்வி குறித்து செய்தியாளர்கள் மு.க.அழகிரியிடம் கேட்டனர். அதற்கு அவர், இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை; நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை, அதனால் தோற்கவுமில்லை ஜெயிக்கவுமில்லை! எங்களிடம் எதுவும் கேட்கவேண்டாம். எனவே பத்திரிகையாளர்கள் செல்லலாம் என்று கூறினார்.
இருப்பினும், அங்கே கூடியிருந்த அழகிரியின் ஆதரவாளர்கள், திமுக தோல்வியில் அழகிரிக்கு மகிழ்ச்சி இருந்தாலும், தான் ஆதரவு கொடுத்த மதிமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்தது குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும், திமுக மூன்றாவது இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன். அதற்காக என்ன வேலை பார்த்தீர்கள் என்று கோபமாகவும் கேட்டார் என்று கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.