விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி. அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, பாரதியார் காலனியைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் பாண்டி (45). இவரது தங்கை காளியம்மாளை இதே இடத்தைச் சேர்ந்த குருவையா மகன் கருப்பசாமி என்பவருக்கு 5

News image
Updated On :17 மே 2014, 11:00 am

கோ.ஜெயக்குமார்

குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, பாரதியார் காலனியைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் பாண்டி (45). இவரது தங்கை காளியம்மாளை இதே இடத்தைச் சேர்ந்த குருவையா மகன் கருப்பசாமி என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். குடும்ப பிரச்னை காரணமாக கருப்பசாமி இறந்து விட்டார். கருப்பசாமியின் இறப்பிற்கு பாண்டியின் குடும்பத்தார்தான் காரணம் என இரு குடும்பத்திற்கும இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ரோட்டில் நின்று கொண்டிருந்த பாண்டியை, கருப்பசாமி ஆபாசமாகப் பேசி அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமுற்ற பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கூமாப்பட்டி போலீஸார் கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கருப்பசாமிக்கு வெட்டு: ஏன் என் அண்ணன் பாண்டியுடன் அடிக்கடி சண்டை போடுகிறாய்? என்று கேட்டு குருவையா, கருப்பசாமியை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம். காயமுற்ற கருப்பையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கூமாப்பட்டி போலீஸார் குருவையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.