விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 23 சுயேட்சை வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 66 ஆயிரத்து 436 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 79 ஆயிரத்து 714 பேரும், திருநங்கைகள்-88 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 46 ஆயிரத்து 238 வாக்காளர்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் 10 லட்சத்து 9 ஆயிரத்து 114 வாக்குகள் பதிவாகியது. இத்தொகுதியில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பொதுவாக பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் தான் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கலின் போது செலுத்திய டெபாசிட்டை திரும்ப பெறமுடியும்.
ஆனால், முதலிடம் பெற்ற அதிமுகவை அடுத்து வைகோ(மதிமுக), ரத்தினவேல்(திமுக) ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர். அதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 23 வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.