

சென்னை மாநகராட்சி 12 வது மண்டலத்தில் வார்டு குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் நடந்தது.
இத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 12வது மண்டலத்தை சேர்ந்த 164 வது மாமன்ற உறுப்பினர் என்.பரிமளா 12வது மண்டலத்தின் வார்டு குழு தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் முதன்மை செயலர், மற்றும் ஆணையாளர், திரு. திரு. விக்ரம் கபூர், புதிதாக தேர்தெடுக்கப்பட்ட 12வது வார்டு குழு தலைவர் என். பரிமளாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.