திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே தாயின் கள்ளக் காதலனை கொலை செய்து குளத்தில் வீசிசென்ற மகன் உள்பட 2 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
திருக்களர் காவல்சரகத்திற்கு உள்பட்ட தோட்டம் என்ற இடத்தில் உள்ள குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சென்ற 15-ம் தேதி அப்பகுதி மக்கள் போலீஸôருக்கு தகவல் அளித்தனர்.சடலத்தை கைப்பற்றி போலீஸôர் பிரேதபிரசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்ததில் குளத்தில் பிணமாக கிடந்தவர் நல்லூர்,மாதாகோவில்தெருவை சேர்ந்த அருள்தாஸ்(37)என்பது தெரியவந்தது.இந்நிலையில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அருளதாஸின் மனைவி ரெஜினாமேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸார் மேல்விசாரணை செய்ததில் புதிய மாதாகோவில்தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் கேரளாவில் தங்கிக்கொண்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்ததாகவும்.அந்தோணிராஜின் மனைவி ராணி என்ற அம்லக்மேரிக்கும் அருள்தாஸ்க்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும்.இது பற்றி தகவல் அறிந்த அந்தோணிராஜ் ஊருக்கு திரும்பியவர் மன உளைச்சலுடன் இருந்துவந்தவர் விஷம் குடித்து சுமார் 8 ஆண்டுக்கு முன் இறந்து விட்டாராம்.
இந்நிலையில் அந்தோணிராஜ் மகன் அருள்பாரதி பெரியவனாக ஆனதும் சில ஆண்டு முன் சென்னைக்கு வேலை தேடி சென்றுவிட்டதாகவும்.சில நாள்களுக்கு முன் ஊருக்கு திரும்பியவருக்கு தனது தாய், அருள்தாசுடன் கள்ளத் தொடர்பை தொடர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.இதில் ஆத்திரமடைந்த அருள்பாரதி,அருள்தாஸை கொலை செய்திட முடிவு எடுத்தாராம்.
சென்ற 14-ம் தேதி இரவு நல்லூர் பகுதியில் நடைபெற்ற மாதாகோவில் திருவிழாவுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த அருள்தாஸை வழி மறித்த அருள்பாரதியும்,அவரது நண்பர் தென்பாதி,சிவபிரகாஷம் மகன் ராஜா என்ற சிவகுருநாதன் ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் உயிரிழந்த அருள்தாசை அருகில் இருந்த குளத்தில் வீசிவிட்டு சென்றுயிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து சனிக்கிழமை இரவு போலீஸார் அருள்பாரதி(19),சிவகுருநாதன்(29)ஆகிய 2 பேóரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.