திருச்சி-நெல்லை எக்ஸ்பிரஸ் விருதுநகர் ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காததால் 1.30 மணிநேரம் தாமதம்

விருதுநகர் ரயில் நிலையத்தில் தொழில் நுட்பக் கோளாறினால்  சிக்னல் கிடைக்காததால் திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 1.30 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால்
Updated on
1 min read

விருதுநகர் ரயில் நிலையத்தில் தொழில் நுட்பக் கோளாறினால்  சிக்னல் கிடைக்காததால் திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 1.30 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியினர்.

திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு காலையில் 10.30 மணிக்கு வந்து, 10.32-க்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல், திங்கள்கிழமையும் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதையடுத்து, 10.32-க்கு புறுப்படும் போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தொழில் நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் சிக்னல் கிடைக்கவில்லை என்பது குறித்து அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதையடுத்து சிக்னலை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதனிடையே ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஆகியோர் வெக்கையால் அவதிப்பட்டனர். அதோடு, கிழே இறங்கவும் முடியாத நிலையில் உள்ளேயே இருந்தனர். பின்னர் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 1.30 மணிநேரம் தாமதமாக சரியாக 12.05 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சிக்னல் கிடைக்காத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com