விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் விளை நிலமாக மாறிய பாசன ஓடை: விவசாயிகள் முற்றுகை

சங்கரன்கோவில் அருகே பாசன ஓடையை ஆக்கிரமித்து விளை நிலமாக மாற்றப்பட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் சுமார் 100 ஏக்கரில் பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள்

News image
Updated On :19 மே 2014, 10:37 am

ஷேக் அப்துல்காதர்

சங்கரன்கோவில் அருகே பாசன ஓடையை ஆக்கிரமித்து விளை நிலமாக மாற்றப்பட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் சுமார் 100 ஏக்கரில் பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து முற்றுகையிட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம், நெல்லை மாவட்ட விவசாயிகள் டிராக்டர் ஓட்டுநர் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியல் வென்றிலிங்கபுரத்தில் பட்டாடைகட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை அடுத்து சிங்கத்துகுளம் மானாவாரி குளமாகும். மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை இந்த குளத்தில் சேமித்து வைத்து அப்பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பட்டாடைகட்டி, வென்றிலிங்கபுரம், சேர்ந்தமரம் பகுதி விவசாயிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கத்துகுளத்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். சிங்கத்துகுளத்திற்கு நீர்வரத்து ஓடை முற்றிலும் தூர்ந்து விட்டது. தூர்ந்த போன ஓடையை ஆக்கிரமித்து சிலர் விளை நிலங்களாக மாற்றி விட்டனராம்.இதனால் சிங்கத்துகுளத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில் சுமார் 100 ஏக்கரில் பாசனம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தூர்ந்து போன பாசன ஓடையில் காணப்படும் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன ஓடையை சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.