விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவைகள் விநியோகம் செய்யப்பட்டன. அதையடுத்து உடனே அந்தந்த பள்ளி வளாகங்களிலேயே
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவைகள் விநியோகம் செய்யப்பட்டன. அதையடுத்து உடனே அந்தந்த பள்ளி வளாகங்களிலேயே வேலைவாய்ப்பு பதிவையும் ஆன்லைனில் ஆர்வத்துடன் பதிவு செய்தனர். 

இம்மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து மாணவர்கள்-11596 பேரும், மாணவிகள் 12831 பேரும் என மொத்தம் 24427 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவைகளை அந்தந்த பள்ளிகளின் மூலம் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.இதற்காக விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் காலையில் 10 மணிக்கு முன்பாகவே தங்கள் பெற்றோர்களுடன் வந்து பள்ளி வளாகத்தில் குவிந்தனர். அதன் பின் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர். அதை உடனே பள்ளி வளாகத்தில் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் ஏற்கனவே 10-வது வகுப்பு பதிவு செய்த வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவைகளுடன்  பிளஸ்2 சான்றிதழ்களை கணிப்பொறி ஆசிரியரிடம் காண்பித்து ஆன்லைனில் பதிவு செய்தனர். இதற்காக மாணவ, மாணவிகள் ஆகியோர் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பதிவு பணிகளை மேற்கொண்டனர். இதேபோல், ஒவ்வொரு பள்ளியிலும் சான்றிதழ்கள் பெற்றவுடன் தகுதியை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பள்ளிகளில் பணியாற்றும்  கணிப்பொறி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே வேலைவாய்ப்பு பதிவு ஆன்லைனில்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், இப்பணி புதன்கிழமை தொடங்கி, தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. அதோடு, குறிப்பிட்ட நாள்களுக்குள் பதிவு செய்யும் அனைவருக்குமே ஒரே தேதிதான் பதிவு மூப்பாக வழங்கப்பட இருக்கிறது. அதனால், பதிவு பணிகளை மாணவ, மாணவிகள் அவசரப்படாமல் மேற்கொள்ளலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com