மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக பெருமன்றம் சார்பில்  திருநெல்வேலியில் வியாழக்கிழமை

Updated On :22 மே 2014, 1:47 pm

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக பெருமன்றம் சார்பில்  திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலர் பெ.சுகுமாரன் தலைமை வகித்தார். தலைவர் கே.எம்.காளியப்பன், துணைச் செயலர் எம்.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கண்ணன், டி.சேவியர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும். இச் சட்டத்தின் கீழ் நலிந்த பிரிவினரின் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் உயர்கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்க வகை செய்யும் அரசாணை எண் 92-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.அந்தோனிராஜ், ஏ.பரமசிவன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.பால்தவசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.சண்முகவேலு, ஏ.சம்சுதீன், வி.முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.