விருதுநகரில் கழிவு நீர் வாய்க்காலில் ஆண் சடலம்: கொலையா என போலீஸார் விசாரணை

விருதுநகரில் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். மேலும், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து  வீசியிருக்காலமோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
Updated on
1 min read

விருதுநகரில் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். மேலும், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து  வீசியிருக்காலமோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே கோட்டைப்பட்டி வருவாய் கிராம உதவியாளராக இருப்பவர் சுப்பிரமணி. இவர் வெள்ளிக்கிழமை இரவு ரயில்வே பீடர் சாலையில் 11.30 மணிக்கு நடந்து சென்றாராம். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கும் போது கழிவு நீர் வாய்க்காலில் ஆண் சடலம் காயத்துடன் தலைகுப்புற கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனே அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்ததில் இதே பகுதியைச் சேர்ந்த கீரைகுமார் என்பது தெரியவந்தது. பின்னர் யாரோ மர்ம நபர்கள் முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை செய்து கழிவு நீர் வாய்க்காலில் வீசிவிட்டு சென்றிருக்காலமோ என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com