திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மதுராந்தகம் அருகே ஆம்னி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர்கள் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை டிரைவர் ஜோயல் ஓட்டிவந்தார். இந்த பஸ்சில் 25 பேர்கள் பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் தேசிய

Updated On :25 மே 2014, 9:20 am

மதுராந்தகம் அடுத்த கள்ளபிரன்புரம் நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை டிரைவர் ஜோயல் ஓட்டிவந்தார். இந்த பஸ்சில் 25 பேர்கள் பயணிகள் இருந்தனர். அந்த பஸ் மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அந்த சாலையை சரக்கு லாரி கடக்க முயன்றதில், எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது. இதில் சரக்கு லாரி சாலையோரம் கவிழ்ந்துவிட்டது. லாரியில் பயணம் செய்த சரக்கு லாரி டிரைவர் பொலம்பாக்கம் ராஜா (22), லாரி கிளினர் ஆலங்குளம் மாரிசாமி (26) ஆகியோரும், பஸ்சில் பயணம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகரைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (வயது36), ஆம்னி பஸ் டிரைவர் ஜோயல் (36), ) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் உடன்டியாக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கபட்டனர்.

இது குறித்து மதுராந்தகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.