விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை மாவட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொள்ள அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பாதுகாப்பு

News image
Updated On :26 மே 2014, 9:42 am

ஷேக் அப்துல்காதர்

மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொள்ள அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்ச கலந்து கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தமிழர் ஆதரவு அமைப்புகள், மாணவர் அமைப்புகள், வழக்குரைஞர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.திருநெல்வேலி மாவட்டத்தில் தமி்ழர் ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தப்படுவதன் எதிரொலியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

திங்கள்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், நீதிமன்றங்கள், பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தில் 17 இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதியில் பாதுகாப்பு பலத்தப்பட்டிருந்தது. போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.