விருதுநகர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை

விருதுநகர் பகுதியில் பகல் முழுவதும் கடும் வெய்யில் அடித்த நிலையில், மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து பூமி குளிர்வித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Updated on
1 min read

விருதுநகர் பகுதியில் பகல் முழுவதும் கடும் வெய்யில் அடித்த நிலையில், மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து பூமி குளிர்வித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகரில் காலை முதல் மாலை 5 மணி வரையில் கடும் வெய்யில் வாட்டி வதைத்தது. அதோடு, வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெக்கையாகவும் இருந்தது. இதையடுத்து மாலையில் 5.30 மணிக்கு வெயிலின் தாக்கம் குறைந்து கருமேகம் சூழ்ந்து மின்னல் வெட்டு ஏற்பட்டது.

பின்னர் இரவு 7 மணிக்கு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. எனவே பகலில் ஏற்பட்ட கடும் வெப்பத்தை மாலையில் மழை பெய்து தணித்தது. இதனால் விருதுநகர் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com