போலி கடன் அட்டை மூலம் நகை வாங்கி மோசடி: இளைஞர் கைது

ராமநாதபுரம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பு(24). இவரும், மற்றொரு இளைஞரும் சேர்ந்து சிவகாசி பேருந்து நிலைய சாலையில் உள்ள தனியார் நகைக்கடைக்கு வெள்ளிக்கிழமை மாலையில் நகை
Updated on
1 min read

சிவகாசி தனியார் நகைக்கடையில் போலி வங்கி கடன் அட்டை (கிரிடிட் கார்டு) மூலம் நகை வாங்கி மோசடி செய்த இளைஞரை கடைக்காரர்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பு(24). இவரும், மற்றொரு இளைஞரும் சேர்ந்து சிவகாசி பேருந்து நிலைய சாலையில் உள்ள தனியார் நகைக்கடைக்கு வெள்ளிக்கிழமை மாலையில் நகை வாங்குவதற்காக வந்தார்களாம். அங்குள்ள நகை வகைகளை கண்டறிந்து வாங்கியுள்ளனர். பின்னர் நகைக்கான விலையை செலுத்துவதற்காக குறிப்பிட்ட வங்கி கிளையின் கடன் அட்டையை காண்பித்துள்ளனர்.

அந்த நபர்களிடம் இருந்து முகவரி உறுதி செய்வதற்கான ஆவணச் சான்று கேட்டடுள்ளனர். அப்போது, முத்துக்கருப்பின் ஓட்டுநர் அடையாள அட்டையை கொடுத்துள்ளார். உடனே கடன் அட்டையை கணிப்பொறியில் செலு்ததி பார்த்துள்ளனர். அப்போது, இக்கடன் அட்டை போலி என்பதும், இதே அட்டை மூலம் விழுப்புரத்தில் உள்ள இதே கிளையில் நகை வாங்கி மோசடி செய்திருந்ததும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து இமெயில் தகவல் அனுப்பியிருப்பதும் தெரியவந்தது.

இதைப் பார்த்து உஷரான இளைஞர்கள் உடனே இருவரும் வெளியேறி தப்பியோடினர். பின் தொடர்ந்து சென்ற ஊழியர்கள் சிவகாசி பேருந்து நிலையப் பகுதியில் முத்துக்கருப்பை மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மற்றொரு இளைஞர் அவ்வழியாக சென்ற பேருந்தில் ஏறி தப்பினார். இது தொடர்பாக நகைகடையின் மேலாளர் ராஜேஸ்வரன் சிவகாசி டவுன் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைதானவரிடம் மோசடி செய்தது தொடர்பாகவும், தப்பியோடிய இளைஞர் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com