ஆலங்குளம் அருகே மகளிடம் செல்போன் மூலம் பேசியதை தட்டிகேட்டவரை வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த சிறுக்கன்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (50).கூலி தொழிலாளி.இவரது மகள் சரண்யா (18).இவர் கரூரில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்கிறார்.அதே தெருவை சேர்ந்த சங்கரமூர்த்தி என்பவரது மகன் இசக்கிபாண்டி,சரண்யாவின் செல்போன் நம்பரை எப்படியோ தெரிந்துகொண்து அடிக்கடி காதலிப்பதாக பேசினாராம்.
இதுகுறித்து சரண்யா ஊரில் உள்ள தனது தாயார் சுப்புலட்சுமியிடம் கூறினாராம். உடனே சுப்புலட்சுமி,அவரது தங்கை மாரியம்மாள் ஆகியோர் இசக்கிபாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை சங்கரமூர்த்தியிடம் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகறாறில் சங்கரமூர்த்தி,அவரது தம்பி ஆறுமுகம், மனைவி மாரியம்மாள் ஆகியோர் அரிவாளால்
வெட்டியும் கம்பால் அடித்தும் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சீதபற்பநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்து சங்கரமூர்த்தியை வெள்ளிக்கிழமை கைது செய்தார். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.