விருதுநகர் அருகே வீட்டிற்குள் பெண்ணை அடைத்து வைத்து கூடுதலாக வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தது தொடர்பாக கணவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீதுவழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துரையைச் சேர்ந்த முருகேசனின் மகள் புவனேஷ்வரி(32). இவருக்கும் விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள சின்னப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அழகர்சாமியின் மகன் ராஜேஷ்கண்ணா(35). இவர்கள் இருவருக்கும் திருணமனமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த திருமணத்தின் போது ரூ.61 ஆயிரம் ரொக்கமும், 30 சவரன் நகை மற்றும் 3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். மேலும், நிலம் வாங்குவதற்காக ராஜேஷ்கண்ணன் நகையை அடமானம் வைத்துள்ளார். அதையடுத்து, கூடுதலாக பணம் நகை கேட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.
மேலும், வெளியில் விட்டால் நடப்பவைகளை வெளியில் தெரிவித்து விடுவார் பயந்து கொண்டு வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார்களாம். இதற்கு அவரது பெற்றோர்களும் உடைந்தையாக இருந்தார்களாம். இதனால் பொறுமையை இழந்த புவனேஷ்வரி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் குடும்பத்தினர் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் ராஜேஷ்கண்ணன், மாமியார் விஜயா, சின்னமாமியார் பஞ்சு, நாத்தனார் சாந்தா, அவரது கணவன் கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.