இன்று வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்பட்டது.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்.15ம் தேதி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2015-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கான படிவங்கள் அக்.15 முதல் நவ.10ம் தேதி வரையில் பெறப்பட இருக்கிறது.  அதன் அடிப்படையில் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்காக வாக்குச் சாவடி அலுவலர்களிடம் பொதுமக்கள் படிவங்களை அளிக்கலாம். அதோடு, அரசியல் கட்சியினரும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களை பெயர் சேர்ப்பதற்கான படிவங்களையும் வழங்கலாம்.

இம்மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் 855 வாக்குச் சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வாக்காளர் சேர்க்கைக்கான  சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஸ்ரீதர் தெரிவி்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com