வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் மழை: அடவிநயினார் அணையில் 540 கனஅடி தண்ணீர் திறப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் பெய்த மழையால் அணைக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் 540 கனஅடி திறக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :3 நவம்பர் 2014, 2:17 pm

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் பெய்த மழையால் அணைக்கு வந்து கொண்டிருந்த உபரிநீர் 540 கனஅடி திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை ஏற்கனவே நிரம்பி விட்ட நிலையில் திங்கள்கிழமை அணைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து திடீரென அதிகரித்தது.மாலை 6 மணி நிலவரப்படி அணையில் 58 மி.மீ மழை பதிவாகியிருந்தது. மேலும் அணைக்கு விநாடிக்கு 540 கனஅடி வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பியதும் உபரி நீரை ஷட்டர் வழியாக திறக்கப்படும். அடவிநயினார் அணையில் ஷட்டர் பழுதடைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அணையின் ஷட்டரில் வழியாக 5 கனஅடி நீர் செல்லும் வகையில் ஓட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஷட்டர் திறக்க முடியாததால் அணையின் ஷட்டருக்கு மேல் உபரி நீர் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் அணையின் 53 பாசனக் குளங்களுக்கு செல்கிறது. இதில் 25 குளங்கள் நிரம்பி மறுகால் செல்கிறது. 10 குளங்கள் நிரம்பி வருகிறது. எஞ்சியுள்ள 8 குளங்கள் ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.