வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு: நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

பணகுடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சியினர் வருவாய்துறை அதிகாரிகள் மீது

News image
Updated On :5 நவம்பர் 2014, 9:41 am

ஷேக் அப்துல்காதர்

பணகுடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சியினர் வருவாய்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பணகுடி அருகேயுள்ள நெருஞ்சிகாலனியில் அக். 25 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை அதன் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்றினார். இந்த கொடிக் கம்பத்தை அகற்ற வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து புதன்கிழமை கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் அமுதாமதியழகன், மாவட்டச் செயலர் எம்.சி. கார்த்திக், மாவட்ட பொருளாளர் எஸ்.பி. செல்லையா, ஒன்றிய செயலர் ஈழவளவன் மற்றும் நிர்வாகிகள் திடீரென திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

ராதாபுரம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.