செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் என்ஜின் கோளாறு: 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கு சென்று சேரும். அதேபோல், சனிக்கிழமையும் சரியான நேரத்திற்கு புறப்பட்டு சென்று
Updated on
1 min read

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் என்ஜின் கோளாறு காரணமாக விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டையில் இருந்து பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கு சென்று சேரும். அதேபோல், சனிக்கிழமையும் சரியான நேரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது,  விருதுநகரை அடுத்த மீசலூர் அருகே வரும் போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டு புகை அதிகமாக வெளியேறியுள்ளது. மேலும், அதிக சூடினால் ஆயில் டேங்கிலிருந்து வெளியேறி பின்புறம் உள்ள 5 ரயில் பெட்டிகள் வரையில் பயணிகள் மீது ஆயில் தெறித்து விழுந்துள்ளது. இதையடுத்து பயணிகள் அபாயச் சங்கிலியை  பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். உடனே என்ஜின் டிரைவர் இறங்கி பார்க்கையில் புகையோடு, ஆயிலும் கொதித்து தெறித்துள்ளது. இது தொடர்பாக உடனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து 10 நிமிடம் நின்ற பின் சீரான வேகத்துடன் ரயிலை இயக்கி விருதுநகர் ரயில் நிலையத்திற்கு 2.40 மணிக்கு வரவேண்டிய நிலையில் தாமதமாக 3.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இது தொடர்பாக விருதுநகர் ரயில் நிலைய அதிகாரிகள் என்ஜினை பார்வையிட்டு உடனே சரிசெய்ய முடியாத நிலையில் மாற்று என்ஜின் கொண்டு வர மதுரை ரயில் நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் உடனே மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு சரியாக மாலை 4.45 மணிக்கு விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், ரயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு சென்று சேரமுடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com