திருச்சுழி அருகே கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு மையம்

விருதுநகர் அருகே இயற்கை பேரிடர்கள் குறி்த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையத்தை ஸ்பீச் தொண்டு நிறுவனம் சார்பில் தொடங்கி
Updated on
1 min read

விருதுநகர் அருகே இயற்கை பேரிடர்கள் குறி்த்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையத்தை ஸ்பீச் தொண்டு நிறுவனம் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சுழி மற்றும் மதுரையைச் மையமாக வைத்து ஸ்பீச் தொண்டு நிறுவனம், விருதுநகர் மாவட்ட தட்பவெப்ப நீதிக்கான குழந்தைகள் இயக்கம் சார்பில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, கல்வி மேம்பாடு, புவிவெப்பமயமாதலை தடுத்தல், சிறுமிகள் திருமணத்தை தடுத்தல், பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்தல், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட சமுதாய பணிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், தற்போது இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டியில் கிராம அளவிலான பேரிடர் பாதுகாப்பு தகவல் மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஸ்பீச் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஜான்தேவாரம் தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தில் அப்பகுதியில் உள்ளவர்களின் மக்கள் தொகை, விளைநிலங்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்கள், தற்போது சூழ்நிலைக்கேற்ப தானியப் பயிர்கள்  செய்யலாம், கல்வி நிலையங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் கிராம மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கணிப்பொறி மற்றும் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையம் நாள்தோறும் 24 மணிநேரமும் செயல்படும். இதன் மூலம் இயற்கை பேரிடர்கள் பற்றிய தகவல்களான வானொலி, தொலைக்காட்சி, துண்டு பிரசுரங்கள், நாளிதழ்கள் ஆகியவைகள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். மேலும், கிராம அளவில் பேரிடர் பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளித்தல், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி தொடர்பான ஆலோசனை பணிகளும் இம்மையங்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பீச் தொண்டு நிறுவனம் மற்றும் விருதுநகர் மாவட்ட தட்பவெப்ப நீதிக்கான குழந்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com